free website hit counter

தீவின் சில பகுதிகளில் இன்று மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 2024 நவம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலைகொண்டது. இது மெதுவாக, வடக்கு-வடமேற்கு நோக்கி இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரக்கூடும்.

இன்று (நவம்பர் 28) புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

அமைப்பின் செல்வாக்கின் கீழ் தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.

வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

தீவின் ஏனைய இடங்களிலும் மழை பெய்யும். வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: