வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக தளர்த்தினால் வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) உள்ளது என வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வாகன இறக்குமதியை முறையாக தளர்த்துவதன் மூலம் வெளிநாட்டு கையிருப்புகளை நிர்வகிக்க முடியும் என மத்திய வங்கி நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாகன இறக்குமதியை தளர்த்துவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என தெரிவித்த கலாநிதி வீரசிங்க, குறிப்பிட்ட துறைகளுக்கான வாகன இறக்குமதிக்கு தற்போது அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2021/2022 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கங்களைத் தொடர்ந்து வாகன இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்தது மற்றும் தேசம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவைத் தொடர்ந்தது.
எவ்வாறாயினும், சுகாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளின் தேவைகளின் அடிப்படையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2023 முதல் வாகன இறக்குமதிக்கு கட்டம் கட்டமாக விதிவிலக்குகளை வழங்க அரசாங்கம் தொடங்கியது.