இன்று நண்பகல் 12 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாக தத்தமது புகையிரத நிலையங்களுக்கோ அல்லது அருகிலுள்ள புகையிரத நிலையத்திற்கோ தெரிவிக்குமாறு அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கு இலங்கை ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
பதவி உயர்வு உள்ளிட்ட பல குறைகள் தொடர்பாக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த இறுதி எச்சரிக்கை வந்துள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரயில்கள் இன்று இயக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
புகையிரத சேவைகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்திய போதிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மத்தியில் புகையிரத நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸாருக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை, பேராதனை, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், கொட்டகலை, நானுஓயா, அம்பேவல, புத்தளம், சிலாபம், அலவ்வ, பொல்கஹவெல, குருநாகல் உள்ளிட்ட 45 புகையிரத நிலையங்களில் இலங்கை இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.