free website hit counter

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளுக்காக ரூ.8.5 பில்லியனுக்கும் அதிகமான பணம் மாற்றப்பட்டுள்ளது– சேமசிங்க

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மொத்தம் ரூ. 8,571 மில்லியன் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை (நவம்பர் 23) முதல் 1,377,000 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும், தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து பேசிய சேமசிங்க, இந்த மேன்முறையீடுகளின் மறுஆய்வு செயல்முறை முடிவடைந்தவுடன், தகுதியுடையவர்கள் என்று கருதப்படுபவர்களும் ஜூலை முதல் அமுலுக்கு வரும் ‘அஸ்வெசுமா’ நன்மைகளைப் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula