ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடந்த காலங்களில் செய்தது போல் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கு, விக்கிரமசிங்க தனது கட்சியில் தொடர்ந்தும் இருந்தால் தாங்கள் அவ்வாறு செய்வோம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். "ரணில் எங்களுடன் இருந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம்" என்றார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் விக்ரமசிங்கவின் வேட்புமனு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் எமது தலைவரின் வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். (4tamilMedia)