ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவோ அல்லது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
“எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக கட்சிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்ட பிளவு. நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)