சமகி ஜன பலவேகய (SJB) சுதந்திர மக்கள் காங்கிரஸின் (நிதாஹாச ஜனதா சபை) உறுப்பினர்கள் குழுவுடன் முக்கிய எதிர்க்கட்சி தலைமையிலான 'சமகி ஜன சந்தனயா'வை உருவாக்குவதற்கான முதல் படியாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
இதன்படி, புதிய கூட்டணியை அமைப்பதற்காக SJB மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி.குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார உட்பட நிதாஹாச ஜனதா சபையின் 06 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து (SLPP) பிரிந்து சென்ற மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் உட்பட சிலர் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக நிதஹாச ஜனதா சபையின் கீழ் அமருவதற்கு முன்னர் தீர்மானித்திருந்தனர்.