கடந்த ஜூன் 1ஆம் திகதி இலங்கை கடற்கரையோரம் தீப்பரவி மூழ்கத்தொடங்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலின் புகை வெளியேறும் செயற்கைகோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் மே மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லும் கப்பல் கொழும்பின் வடமேற்கில் நங்கூரமிட்டபோது நகரத்தின் துறைமுகத்திற்குள் நுழைய காத்திருந்தது. ஆனால் தீப்பரவல் ஏற்பட்டு கப்பல் மூழ்கத்தொடங்கியது. தீயை அணைக்க இரண்டு வாரங்கள் ஆனதுடன் கப்பலின் எண்ணெய் சரக்குகள் கடலில் கலந்து மாசடைந்தது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மரணித்து கரை ஒதுங்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பேரழிவுகளுக்கு பதிலளிப்பதில் பிற யு.எஸ் மற்றும் சர்வதேச முகவர் நிறுவனங்கள் உடனடி பாத்திரங்களை வகிக்கின்றன என்றாலும், அவதானிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குவதில் நாசா ஒரு பங்கு வகிக்கிறது. கடந்த தசாப்தத்தில், இயற்கை மற்றும் தொழில்நுட்ப பேரழிவுகளிலிருந்து கணித்தல், தயாரித்தல், பதிலளித்தல் மற்றும் மீட்பு ஆகியவற்றை மேம்படுத்தக்கூடிய பூமியின் அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் திறனை நாசா தீவிரமாக உருவாக்கியுள்ளது.
அதன் அடிப்படையில் இப்புகைப்படங்கள் நாசா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
சீனாவை அம்பலப்படுத்திய மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு !
சோனு சூட்டை சந்திக்க 700 கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்ட சிறுவன் !