ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (21) இடம்பெற்றது.
மாநகரசபைகள் , நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகள் என 341 உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்தவர்களாவர்.
அத்தோடு இவர்கள் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேறு கட்சிகளின் ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்களது கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் செவ்வாய்கிழமை (21) இடம்பெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
உறுப்புரிமை நீக்கப்பட்ட உறுப்பினர்களில் 300 பேர் தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கு அவகாசம் கோரியிருந்த போதிலும் , அதனைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளது.