இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வின் போது, திரு. விக்கிரமசிங்க, டாக்டர் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
புது தில்லியில் உள்ள டாக்டர் சிங்கின் இல்லத்தில் வந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அவர் ஒரு சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இந்திய பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். (நியூஸ்வயர்)