இன்று (01) காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூபா 1700 ஆக உயர்த்துவதாக அறிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தியதுடன், தனது ஜனாதிபதி பதவியின் கீழ் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி விக்கிரமசிங்கவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.