ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ITAK பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், சானக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிஹரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். (PMD)