ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராகப் போட்டியிட்டால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய ஆற்றல் அவருக்கு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தாம் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களில் 80-90% பேர் ஜனாதிபதியை ஆதரிப்பதாகவும் அவர்கள் அவருடன் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் அமைச்சர் ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச களமிறக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, அந்த தீர்மானத்திற்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என அமைச்சர் ரன்துங்க தெரிவித்தார்.
நாமல் ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட இன்னும் பல வருடங்கள் இருப்பதால், இன்னும் 05 அல்லது 10 வருடங்களில் மக்களே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அமைச்சர் ரணதுங்க உறுதியளித்துள்ளார்.