ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு இலங்கை Previous Article லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு Next Article பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை ஹஜ் கடமைக்கு இலங்கையிலிருந்து ஹஜ்ஹாஜிகளை அனுப்பாதிருக்க தீர்மானம் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இந்த பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதிலும் ஒரே சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி இந்த செயலணி நிறுவப்பட்டது. கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு பதவிக் காலத்தை நீடிப்பதாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவித்துள்ளார். Previous Article லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு Next Article பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை ஹஜ் கடமைக்கு இலங்கையிலிருந்து ஹஜ்ஹாஜிகளை அனுப்பாதிருக்க தீர்மானம்