free website hit counter

"முன்னாள் ஜனாதிபதியுடன் SJPயும் கைகோர்க்க கூடும்": சஜித்தை பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
முன்னாள் இராணுவத் தளபதி, ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஏற்கும் நடவடிக்கை குறித்து, எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இந்த வாரம் சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தாம் சிறையில் அடைக்கப்பட்டதில் தயா ரத்நாயக்க முக்கிய பங்காற்றியதாக தெரிவித்தார்.

தயா ரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதியுடன் SJPயும் கைகோர்க்க கூடும் என தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் SJB ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: