சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பின் போது, 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் NCMக்கு எதிராகவும், 75 பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
NCM தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தை ஏற்று அறிக்கையொன்றை வழங்கினார்.
பெப்ரவரி மாதம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான NCM ஒன்றில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டன.
உச்சநீதிமன்ற நிபந்தனைகளை மீறி ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவுக்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்ததற்காக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்கிப்படிருந்தது.