2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக இடைக்கால நியமக் கணக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
இது ஒரு பாரிய தேர்தல் நடைபெறவுள்ள வருடம் எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது இதற்கு முன்னரும் இடைக்கால தராதர கணக்குகள் நிறைவேற்றப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின்படி, 2024 டிசம்பர் 31 வரை மட்டுமே வருவாய் செலவினங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான தனி பட்ஜெட் ஆவணத்தில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.