சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய,1 வருட பல நுழைவு மற்றும் ஒற்றை நுழைவு சுற்றுலா விசாக்களுக்கு மேலதிகமாக புதிய விசாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட 1 வருட பல நுழைவு மற்றும் ஒற்றை நுழைவு சுற்றுலா விசாக்கள் தற்போது 06 மாத காலத்திற்கு வழங்கப்படுகின்றன.
இதற்கமைய, 6 மாதங்கள் தங்குவதற்கான புதிய 5 வருட பல நுழைவு சுற்றுலா விசா வழங்கப்படுவதாக ஹரின் பெர்னாண்டோ குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.