மாதாந்தம் 150,000 ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகை வட்டியை ஈட்டும் அதேவேளையில் 10 வீத வரியை செலுத்த வேண்டிய வைப்புதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி வருவதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வைப்பாளர்களின் கவலைகள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்படும் என்பது குறித்த பொறிமுறையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விரைவில் வெளியிடும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அண்மையில் அதிகரிக்கப்பட்ட 10 வீத நிறுத்திவைப்பு வரியானது தற்போது அனைத்து வைப்பாளர்களிடமிருந்தும் அறவிடப்படுகின்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது அனைத்து வைப்பாளர்களிடமிருந்தும் 10 வீதம் அறவிடப்படுவதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், புதிய பொறிமுறையானது வருமான வரம்புக்குக் கீழ் உள்ள வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கும் என்று அமைச்சர் கூறினார்.
"மாதாந்திர வைப்புத்தொகை வட்டி ரூ.150,000-க்குக் குறைவாக உள்ள வைப்புத்தொகையாளர்களும் புதிய வழிமுறை உருவாக்கப்படும் வரை 10 சதவீதப் பிடித்தம் செய்யும் வரியைச் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான். புதிய பொறிமுறையானது ரூ.150,000-க்கும் குறைவான வைப்புத்தொகையாளர்களுக்கு மாதாந்திர வைப்பு வட்டியிலிருந்து விலக்கு அளிக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும். " என்று அவர் கூறினார்.