இன்று (மார்ச் 05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள இலங்கை ரயில்வே ஊழியர்கள் பலர் தீர்மானித்துள்ளனர்.
ரயில் இன்ஜின் இயக்க பொறியாளர்கள், ரயில்வே காவலர்கள், ரயில்வே மேற்பார்வை மேலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
தங்களின் சம்பளத்தை குறைக்கும் அமைச்சரவை பத்திரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.