free website hit counter

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பான முக்கிய அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மாணவர்கள் சீருடை தொடர்பிலான அறிவுறுத்தல்.
பாடசாலை நேரங்களில் மாணவர்களை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கை, கால்களை மறைக்கும் வகையிலான நீண்ட ஆடைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் டெங்கு ஒழிப்பு தொடர்பான மேல் மாகாண உப குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சும் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் 44,500இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: