கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது நுகர்வோருக்கு பில்களை செலுத்த வழங்கப்பட்ட நிவாரண காலத்தை இனி நீட்டிக்க முடியாது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
"நிலுவையில் உள்ள மின் கட்டணம் காரணமாக CEB பாரிய நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. தற்போதைய நிலுவை தொகை ரூ. 44 பில்லியனை நெறுங்கியுள்ளது.
கடந்த மாதம் மற்றும் இந்த மாதத்திற்கான கட்டணங்கள் இதுவரை பெறப்படவில்லை. இருப்பினும் கட்டனங்கள் பெறப்படவில்லை என்பதற்காக கடந்த மாதம் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவில்லை இந்த மாதமும் மின்சாரம் துண்டிக்கப்படாது" என அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் "நிலுவையில் உள்ள பில்களுக்கு நாங்கள் வரி விதிக்கவில்லை. பிரச்சினை என்னவென்றால், பில்களைச் செலுத்தத் வசதியுள்ளவர்களும் கட்டனங்களை செலுத்தவில்லை என்பது தான். இந்த நிலையில் நிவாரண காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்தால், நாம் மேலும் கடுமையான நிதி நெறுக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.”என்று அவர் கூறினார்.
நிலைமையை புரிந்துக்கொண்டு மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.