அடுத்த வருடம் முதல் தனியார் வாகன இறக்குமதியை படிப்படியாக தளர்த்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"இந்த ஆண்டு வாகன இறக்குமதி நடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால் அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அதைச் செய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள கார் சந்தையில் பிரச்சினை இருப்பதாக தமக்கு தெரியும், ஆனால் கொடுப்பனவு நிலுவையின் கீழ், வாகனங்களைத் தவிர மற்ற அனைத்தையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
"கார் இறக்குமதியை அனுமதித்தால், நாடு பின்னோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால், முறையாக, படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம். முதல் கட்டமாக அத்தியாவசிய வகை வாகனங்களை இறக்குமதி செய்வோம்" என அவர் கூறினார்.
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்போது கேள்விகளை எழுப்பிய இளைஞர்கள், பயன்படுத்திய கார் சந்தையில் தற்போதைய விலைகள் இருமடங்காக மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் சரியான விலைக் கட்டுப்பாடு இல்லை எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.