இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் போன்று தோற்றமளிப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கவலை வெளியிட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகக் காட்டிக் கொள்வதுடன், மருந்துகளை பரிந்துரைப்பதும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய GMOA, இது நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுகாதார அமைச்சு இது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கத் தவறியமை வருத்தமளிப்பதாக GMOA தெரிவித்துள்ளது.
போலி வைத்தியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு சுகாதார அமைச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள GMOA, இந்த நோக்கத்திற்காக தனது முழு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.