பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
28 நவம்பர் 2023 அன்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் கீழ் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.