இலங்கைத் தலைநகர் பொழும்பிலுள்ள மருதானைப் பகுதி பொலிஸ் காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மூன்று தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி, தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத் தகவலை மருதானைக் காவல்துறைத் தகவல்களும் உறுதி செய்துள்ளதாக அறிய வருகிறது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    