பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியினால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள்தொகையில் கணிசமான வீழ்ச்சியை சந்திக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் சனத்தொகை பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்தார்.
2022 இல் இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை 2013 இல் பதிவானதை விட 90,000 ஆக குறைந்துள்ளது என்று கூறிய அவர், தற்போதைய பிறப்பு விகிதம் இறப்பு எண்ணிக்கையை நெருங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.
நாட்டின் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என்றும் பேராசிரியர் டி சில்வா எச்சரித்தார்.