கணிதம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து தற்போது நடைபெற்று வரும் அரசாங்க பாடசாலை தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
கசிவு பற்றிய தகவலைப் பெற்ற பின்னர் இடைநீக்கத்தை உறுதிப்படுத்திய திணைக்களம் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளது.