free website hit counter

மின் கட்டணம் குறைப்பு : புதிய கட்டணங்கள் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) முதல் மொத்தமாக 22.5% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும்.
உள்நாட்டு கட்டணங்கள் 27% குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு 30%, ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 25% கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

PUCSL ஆல் அங்கீகரிக்கப்பட்ட கட்டணக் குறைப்பு பின்வருமாறு:

0-30 அலகுகள்: ரூ.8ல் இருந்து ரூ.6 ஆக குறைக்கப்பட்டது

31-60 அலகுகள்: ரூ.20ல் இருந்து ரூ.9 ஆக குறைக்கப்பட்டது

0-60 அலகுகள்: ரூ.25ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது

61-90 அலகுகள்: ரூ.30ல் இருந்து ரூ.18 ஆக குறைக்கப்பட்டுள்ளது

91-120 அலகுகள்: ரூ.50ல் இருந்து ரூ.30 ஆக குறைக்கப்பட்டது

121-180 அலகுகள்: ரூ.50ல் இருந்து ரூ.42 ஆக குறைக்கப்பட்டுள்ளது

180 அலகுகள்+: ரூ.75ல் இருந்து ரூ.65 ஆக குறைக்கப்பட்டுள்ளது

electricity-tariffs-reduced-new-july-rates-revealed

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula