நாட்டில் பாதாள உலகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக இலங்கை காவல்துறை புதிய மோட்டார் சைக்கிள் படையணியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இல்லாதொழிப்பதே முக்கிய இலக்காகும் என பொலிஸ் அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர் அலஸ் கூறினார்.
அதிகாரிகள் தங்கள் ஆயுதங்களை சரியான காரணத்திற்காக பயன்படுத்த பயப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். சரியான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று கூறினார்.
தற்போதுள்ள படையணிகள் தமது இலக்கை அடைய போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிக விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளார்.
“எங்களுக்கு ஒரு இலக்கு உள்ளது. அனைத்து காவல்துறை அதிகாரிகளும் இலக்கு பற்றி அறிந்திருக்கிறார்கள். நான் விரும்புவது இலக்கை அடைய வேண்டும் என்பதுதான். உங்கள் சம்பளம் மற்றும் இதர சலுகைகளை உயர்த்தியுள்ளோம். உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது எங்களுடைய இலக்கை நோக்கி பாடுபடுவதை மட்டுமே” என்று அவர் மேலும் கூறினார்.