60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் குணவர்தன, உரிய வட்டி வீதம் 8.5% ஆக பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதால், சிரேஷ்ட பிரஜைகள் கணக்கு வைத்திருப்பவர்கள் தமது வைப்புத்தொகையை மீளப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அந்தவகையில், மூத்த பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.