free website hit counter

திருகோணமலையில் திடீர் புத்தர் வந்தார் - சென்றார் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திருக்கோணமலை பிரதான கடற்கரையில் சட்டத்திற்கு முரணாக, அனுமதி  பெறாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் கடற்கரை பகுதியை  வேலி  அடைத்து, புதிய பௌத்த விகாரை கட்டுமான பணிகள் இடம் பெற்று வந்த நிலையில், இது தொடர்பாகல் அரசாங்க தரப்பில் பிரதி அமைச்சர் மற்றும் காவல்துறை என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று பகல்  20க்கும் மேற்பட்ட போலிசார் குறித்த பகுதியில் இருந்த போதும்,  சட்டவிரோத கட்டிடம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விடயத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால, மற்றும்  பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் எடுத்த முயற்சியில், இன்றிரவு அவ்விடத்தில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டிருக்கிறது. இதேபோல் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானப் பணிகளும் அகற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இனங்களுக்கு இடையில் அநுர அரசு மேற்கொண்டு வரும் இணக்கப் போக்கினைக் குழுப்பி, இனமுரண்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula