தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமகி ஜன பலவேகய (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் எனது கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. கடந்த காலத்தில் இருமுனைப் போர் மட்டுமே இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும் ஆளும் கட்சி சார்பில் ஒருவரும் மட்டுமே பிரதான வேட்பாளர்களாக இருந்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருப்பதால் அது இன்று மாறிவிட்டது, ”என்று விக்கிரமசிங்க கூறினார்.
“அவர்கள் அனுர மற்றும் சஜித். சஜித்தை அநுர முறியடிப்பார்” என விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.