free website hit counter

வாகன இறக்குமதி தொடர்பில் உள்ள பிரச்சினைககளுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் ட்ரக்குகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் (எல்ஓசி) வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க தலையிடுவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் கடிதங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தாம் தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார். c பொருளாதார நெருக்கடியைத் தணிக்க முன்னர் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இலங்கையின் கடன் கடிதங்கள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கம் அண்மைக்காலமாக சில வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்யும் முயற்சியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கவலைகளுக்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

சம்பந்தப்பட்ட கடன் கடிதங்களுக்கு அரசாங்க உத்தரவாதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: