free website hit counter

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க தேரர் கோரிக்கை !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தலைமையில் மேற்கொள்ளப்படும் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், நாடும், மக்களும், புத்த சாசனமும் கடுமையான அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர்,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என, ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜனாதிபதிக்கு தேரர் அனுப்பி வைத்த  கடிதத்தில், கல்விச் சீர்திருத்தங்களுக்காக பிக்குகள், ஏனைய மதத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்களிடம் கருத்துகள் பெறப்படவில்லை. இந்தச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இது நாட்டிற்கு ஆபத்தான நிலை. இந்த ஆபத்திலிருந்து நாடும் மக்களும் புத்த சாசனமும் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென, நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக எல்லே குணவங்ச தேரர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula