இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பின் பின்னர், பாராளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியுள்ளது. பாராளுமன்றத்தில், நேரத்தை வீணடிக்காமல், பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேட்டுக் கொண்டார்.
ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தது. எதிர்க்கட்சிகள் பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை முன்மொழிய பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோகினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் , 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகராக அஜிதத் ராஜபக்ஷவின் பெயரை பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்தார்