இலங்கை சுற்றுலா மொபைல் செயலி மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசா வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த மொபைல் அப்ளிகேஷன் இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணையத்தால் (SLTDA) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியேற்றத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள ‘ஆன்லைன் மின்னணு சுற்றுலா விசா செயல்படுத்தல் அமைப்பு (ETA)’ மூலம் சுற்றுலா பயணிகள் தங்கள் விசாக்களைப் பெற வேண்டும். சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 70 அமெரிக்க டாலர்கள், சார்க் அல்லாத நாடுகளிலிருந்து 85 அமெரிக்க டாலர்கள் மற்றும் சிங்கப்பூர், மாலத்தீவு மற்றும் சீஷெல்ஸிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 50 அமெரிக்க டாலர்கள் வசூலிக்க முன்மொழியப்பட்டது. இதன்மூலம், 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசாக்களை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.