பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் இதை தெரிவித்துள்ள நிலையில், பஷில் ராஜபக்ஷவின் உறுப்புரிமையினை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தேசிய பொருளாதாரம், ஜனநாயகக் கொள்கை ஆகியவை பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில், நாட்டின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜக்ஷக்களின் குடும்ப ஆட்சி தொடர்ந்தால் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.