கொரோனா வைரஸின் டெல்டா திரிபினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அதிகரிக்க கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழுவின் உறுப்பினர் வைத்தியர் ருவான் ஜெயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மேலும் நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இறப்பு வீதம் இந்தியா போன்ற நாடுகளிற்கு சமமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தொடர்ந்தும்சமூக விலக்கலை பின்பற்றவேண்டும் முக்கவசங்களை அணியவேண்டும்,என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் பலாபலன்கள் உடனடியாக தென்படாது சில மாதங்கள் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    