வடக்கு கிழக்கினை தமிழரின் தாயக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் எனும் நாடு எவ்வாறு உருவான விதத்தை நினைவில் கொண்டு இந்த விடயத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கிவிட்டு, நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சுயாதீனம் குறித்து இங்கு விவாதித்து எந்தவொரு பலனும் கிடையாது. 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாது செய்தமையால் இன்று சர்வதேசத்தின் பகையை சம்பாதிக்க வேண்டிய ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சில செய்திகள் :
- சித்ராலயா கோபுவுக்கு மைல்கல் பிறந்த நாள் !
- அய்யப்பனும் கோஷியும் ஐஸ்வர்யா ராஜேஷும்!
- சர்வதேச சமூகத்தை முட்டாளாக்காதீர்கள்: அரசாங்கத்துக்கு எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டு!
- புதிய அமைச்சகத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி.
- உலக சாக்லேட் தினம் 2021 : டார்க் சாக்லேட்டின் பயன்கள்
- தமிழகத்தில் மறக்கப்படும் தமிழர் கலைவடிவம் !
- தருபவரையும் பெறுபவரையும் உயர்த்தும் உதவி !