கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படும். எனவே, மாகாணங்களுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.