இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அமெரிக்கா கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கரிசனையை தெரிவிப்பதற்காக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை தொடர்புகொள்வதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி மார்ட்டின் கெலி இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோது, வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தலையீட்டை கோரியுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் ஒன்று இலங்கை என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் வரவேற்றுள்ளார்.