“புர்கா அணிவது அரேபியக் கலாசாரமாகும். முஸ்லிம் சமூகம் அதனை உணர்ந்து புர்கா அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் புர்காவுக்கு தடை விதிக்கவில்லை. முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களிடமிருந்து பிரிவதற்கு புர்காவும் ஒரு காரணமென கடந்த அரசாங்கம் கூறியது. கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புர்காவை நான், எதிர்க்கிறேன். இதனைக் கடந்த பத்து வருடங்களாகவே கூறிவருகிறேன். புர்காவுக்கு தடை விதிப்பதற்கு அப்பால் புர்கா அணியக் கூடாது. தனது மதத்தை மற்றொருவருக்குக் கொண்டு செல்வது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. எனவே, இதற்கு ஏனையோருடன் முதலில் கலந்துரையாட வேண்டும். இதனை விடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்பது பயனற்றது.
புர்கா என்பது அரேபியக் கலாசாரம். இதனை சமூகம் என்றவகையில் முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்காவ அணிவதை நிறுத்த வேண்டும்.” என்றுள்ளார்.