free website hit counter

பொருளாதாரத்துக்காக மக்கள் உயிர்களை பலியிடாதீர்கள்: ரணில்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்த மருத்துவ ஆலோசனையை அரசாங்கம் பெறவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

விசேட அறிக்கையொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைக்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு 30 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இந்த வருடம் 30 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை.

இதன் காரணமாக கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு புதிய திட்டம் அவசியம். முதலாவது டோஸ் மருந்தினை பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்கவேண்டியது அவசியம் இதற்கான மருந்தினை இலங்கை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்குகின்றது. ஆனால் அனைத்து மக்களுக்கும் அது கிடைக்கவில்லை. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பொதுமக்களின் உயிர்களை பலிகொடுக்கவேண்டாம்.

கடந்த நவம்பரில் தடுப்பூசி திட்டத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தால் தற்போது தடுப்பூசிக்கு பிரச்சினை வந்திருக்காது.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula