டி20 உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று பிப்ரவரி 11ம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் சானக்க, பந்து வீச தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய 14.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, DLS முறைப்படி 2வது இன்னிங்ஸ் 19 ஓவராக குறைக்கப்பட்டு, இலங்கைக்கு 143 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடி இலங்கை அணி, 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலைப்பெற்றுள்ளது.