இலங்கை கிரிக்கெட் (SLC) ஜப்பான் கிரிக்கெட் சங்கத்துடன் (JCA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது ஜப்பான் தனது விளையாட்டை மேம்படுத்த ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு பற்றிய நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம் உதவுகிறது.
ஜப்பானில் T20 போட்டிகளில் விளையாடுவதற்கு SLC அணிகளை அனுப்புவதோடு, ஜப்பானிய கிரிக்கெட் அணிகளையும் இலங்கையில் நடத்தும், அதே நேரத்தில் அவர்களின் வீரர்களுக்கு LPL அணிகளுடன் பயிற்சி பெற வாய்ப்புகள் வழங்கப்படும்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவுக்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நவோக்கி அலெக்ஸ் மியாஜிக்கும் இடையில் SLC தலைமையகத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கையெழுத்திடும் நிகழ்வின் போது இலங்கைக்கான ஜப்பானின் பிரதித் தூதுவர் கொட்டாரோ கட்சுகி, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜப்பான் கிரிக்கெட் அபிவிருத்திக்கான நல்லெண்ணத் தூதுவர் பிரியந்த காரியப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை கிரிக்கெட்டின் சமீபத்திய நடவடிக்கையானது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அசோசியேட் உறுப்பு நாடுகளுக்கு உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.