இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 19 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இஷான் கிஷன் 35 ரன்கள் குவித்தார். விராட் கோலி 17 ரன்கள், ரிஷப் பண்ட் 8 ரன்களில் வெளியேறினர்.
அதன்பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 34 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர். 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் வெங்கடேஷ் அய்யர்.
இந்திய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.