இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு நடந்தது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் விளாசினார்.
இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 137 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ், தசுன் சனகா தலா 23 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவும்
இத் தொடரின் ஆட்டநாயகனாக அக்சர் படேலும் தெரிவானார்கள்.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.