இந்த வெற்றியின் மூலம் ஸ்வியாடெக் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
அதேபோல் அமெரிக்க வீராங்கனை பெகுலா தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிருந்தார்.
இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இகா ஸ்வியாடெக் மற்றும் பெகுலா நேருக்கு நேர் மோதினர்.
இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், பெகுலாவை எளிதில் வீழ்த்தினார். 59 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-1 மற்றும் 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் ஸ்வியாடெக் பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.