ஒவ்வொரு நகர்த்தலும் தீட்டும் கூர்மை, வேகமான ஆற்றலையும் தரும் விளையாட்டு சதுரங்கம்.
உலக சதுரங்க சாம்பியன் போட்டிகள் 2024 தொடங்கவுள்ள நிலையில் கூகுள் தனது முகப்பு லோகோவின் மாற்றத்துடன் கொண்டாடவுள்ளது.
64 கருப்பு வெள்ளை 8×8 சதுர கட்டங்களையும், பதினாறு காய்களையும் கொண்ட பலகை விளையாட்டான சதுரங்கம் இந்தியாவில் 6ஆம் நூற்றாண்டிலிருந்து விளையாடப்பட்டு வருகிறது. இருவர் மட்டுமே ஆடும் இந்த ஆட்டத்தில் ராஜாவாக இருப்பதே உத்தி.
15 ஆம் நூற்றாண்டிலிருந்து சதுரங்க விளையாட்டின் விதிகள் நவீன வடிவம் பெற்றதுடன் புதிய மறு செய்கைகளுடன் முதல் சர்வதேசப் போட்டி 1851 இல் நடைபெற்றது.
இந்நிலையில் 2024இன் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் இவ்வாரம் முதல் டிசம்பர் மாதம் வரை நடக்கவுள்ளன. இதில் உலகின் தலைசிறந்த சதுரங்க வீரர்கள் சிங்கப்பூரில் 14 கிளாசிக்கல் விளையாட்டுகளில் நேருக்கு நேர் போட்டியிடவுள்ளனர்.
சிங்கப்பூரின் சென்தோசா தீவில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியின் இறுதிப்போட்டியில் சீனாவைச் சேர்ந்த உலக நடப்பு சாம்பியன் டிங் லிரன் உடன் இந்தியாவைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜு, மோதவுள்ளது குறிப்பிடதக்கது.
ஒவ்வொறு போட்டிகளும் நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும். மேலும் 7.5 புள்ளிகளைப் பெறும் முதல் வீரர் உலக சாம்பியனாவார். போட்டி சமநிலை அடைந்தால் அடுத்ததாக நடக்கும் ரேபிட் மற்றும், பிளிட்ஸ் போட்டிகளில் ஒவ்வொரு வீரரும் சக வீரரை 3 நிமிடங்களுக்குள் செக்மேட் செய்யவேண்டும். வெற்றிப்பெறும் வீரர் 2024 FIDE உலக சாம்பியனாக முடிசூட்டப்படுவதோடு, 2.5மி டாலர் உடன் வெளியேறுவார்.
பலதரப்பட்ட விளையாட்டுக்களை லோகோ டிசைன் மூலம் கொண்டாடும் கூகுள் முதல்முறையாக இவ்வாண்டு சதுரங்க விளையாட்டை பிரதிபலிக்கும் ராஜா, ராணி காய்கள்; சிங்கப்பூர் நாட்டினை பிரதிபலிக்கும் விடங்களையும் உள்ளடக்கி லோகோவை வடிவமைத்து சதுரங்க போட்டியை கொண்டாடுவது குறிப்பிடதக்கது.